கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி – பிரதமர் பாராட்டு
In இந்தியா January 3, 2021 6:12 am GMT 0 Comments 1337 by : Dhackshala

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டமை மிக முக்கியமான முடிவு என பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்று பிரதமர் மோடி தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுப்படுத்தும் வகையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மற்றும் ஆரோக்கியமான இந்தியா என்ற நோக்கத்தை விரைவுபடுத்தும் வகையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கு பாராட்டுகள். கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
A decisive turning point to strengthen a spirited fight!
DCGI granting approval to vaccines of @SerumInstIndia and @BharatBiotech accelerates the road to a healthier and COVID-free nation.
Congratulations India.
Congratulations to our hardworking scientists and innovators.
— Narendra Modi (@narendramodi) January 3, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.