இந்தியாவில் துணிச்சலை விதைத்தார் பாரதி- சர்வதேச பாரதி விழாவில் மோடி உரை!

தமிழ் மொழியும், தாய்நாடும் இரு கண்கள் என நினைத்தவர் பாரதியார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதியின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் காணொளி தொடர்பாடல் மூலம் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய பிரதமர் மோடி, பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், துணிச்சலாக செயற்பட்ட மகாகவி பாரதி பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க எண்ணினார் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என நினைத்த பாரதி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.