இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியளிக்குமாறு கோரிக்கை
In இந்தியா December 6, 2020 4:35 am GMT 0 Comments 1427 by : Dhackshala

இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு பிரித்தானிய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், குறித்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
அதன்பின்னர், பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு பக்ரைன் நாடும் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.