இந்தியாவில் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் ; அறுவர் இனங்காணப்பட்டனர்!
In இந்தியா December 29, 2020 9:00 am GMT 0 Comments 1351 by : Krushnamoorthy Dushanthini

வீரியம் மிக்க கொரோனா வைரஸ் தொற்றுடன் ஆறு பேர் இனங்காணப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.