இந்தியாவுக்காக தயாராகும் MH-60 ரோமியோ ஹெலிகொப்டரின் படம் வெளியானது!

இந்திய கடற்படைக்காக தயாரித்துவரும் எம்.எச்-60 ரோமியோ ஹெலிகொப்டரின் முதல் படத்தை, அமெரிக்காவின் லொக்ஹீட் மார்டின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பல்முனை பயன்பாடு வசதிகொண்ட எம்.எச்-60 ரோமியோ ஹெலிகொப்டர், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கியழிக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில், இந்திய கடற்படைக்காக மொத்தம் 24 ஹெலிகொப்டர்களை இந்திய மதிப்பில் 18 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க அமெரிக்காவுடன் 2018ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி, இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஹெலிகொப்டர்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய கடற்படையின் பிரத்தியேக வண்ணத்துடன் அதன்முதல் படம் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.