இந்தியா-அவுஸ்ரேலியா மோதும் 2ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டி- தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
In கிாிக்கட் December 6, 2020 4:23 am GMT 0 Comments 1597 by : Dhackshala

அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையேயான 2ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பிலும் அவுஸ்ரேலிய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் நோக்கிலும் களமிறங்கவுள்ளன.
எனவே இன்றைய போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.