இந்தியா – வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது!
In இந்தியா December 22, 2020 8:50 am GMT 0 Comments 1372 by : Krushnamoorthy Dushanthini

இந்தியா – வியட்நாம் இடையே இராணுவம், வர்த்தகம், எரிசக்தி, நீர்வளம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வியட்நாம் பிரதமர் நகுயன் ஜுயன் புக் உடனான காணொலி காட்சி மூலமான உரையாடல் நடைபெற்றது.
தென் சீனக் கடல் பிராந்தியத்தில், சுதந்திரமான சரக்கு போக்குவரத்தை பராமரிப்பது, இந்திய – பசிபிக் கடல் பிராந்தியத்தில், விதிமுறைகளைப் பின்பற்றி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள், இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, இராணுவ துறையில், 750 கோடி ரூபாய் கடன் வரம்பு உட்பட, எரிசக்தி, ஆரோக்கியப் பராமரிப்பு, நீர் மேலாண்மை ஆகிய துறைகளில், இரு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.