இந்திய- இலங்கை மீனவர்களின் உயிரிழப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிருப்தி
In இலங்கை January 22, 2021 2:21 am GMT 0 Comments 1329 by : Yuganthini

இலங்கைக் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் ஒரு இலங்கை மீனவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை இந்திய அரசாங்கம் பதிவு செய்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கடற்படையினரின் படகுடன் மீனவர் படகொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக டெல்லியிலுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரத்திடம் இந்திய அரசாங்கம் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இவ்வாறான உயிரிழப்பு இடம்பெற்றமை குறித்து இந்தியா மிகவும் வருத்தமடைகின்றது.
மேலும், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக இரண்டு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இருக்கின்ற புரிந்துணர்வு பேணப்பட வேண்டும்.
அத்துடன் இந்த விடயத்தை மனிதாபிமான ரீதியாக அனுகி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இத்தகையதொரு சம்பவம் பதிவாகாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.