இந்திய உயர்சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் வளாகங்களை ஆரம்பிக்கலாம் – பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி

இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் இந்தியாவில் வளாகங்கள் அமைப்பது போன்று, சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்திய கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் வளாகங்களை அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் அதிகபட்சம் 3 இடங்களில் வளாகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு கல்வி ஆண்டுக்கு ஒரு வளாகத்தை மட்டுமே அமைக்க அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், 5 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளில் நிரந்தர வளாகத்தை உருவாக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் வளாகங்களை ஆரம்பிப்பதற்கு மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற்றாக வேண்டும் எனவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.