இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா
In இலங்கை February 14, 2021 10:36 am GMT 0 Comments 1311 by : Dhackshala

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரியும் இந்திய செயலக ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்சமயம் குறித்த அதிகாரி இலங்கை அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொவிட் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் ஸ்தானிகராலய வளாகங்கள் தற்சமயம் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் நிலையான நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.