இந்திய மாலுமிகள் கடத்தல் விவகாரம் – உறுதி செய்தார் சுஸ்மா சுவராஜ்
In இந்தியா May 7, 2019 9:02 am GMT 0 Comments 2223 by : Krushnamoorthy Dushanthini

நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐவர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர். இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.