இந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி
In இலங்கை January 27, 2021 9:02 am GMT 0 Comments 1419 by : Yuganthini
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கை அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்கள முன்றலில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் ஆரம்பமான பேரணி, யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ரானி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள், தமது கோரிக்கை மனுவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.