இந்திய – மேற்கிந்திய தீவுகள் நாளை இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன!
இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை எதிர்ப்பார்த்தும், தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியும் களமிறங்கின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியதுடன், ஒருநாள் தொடரை 3-1 எனத் தனதாக்கியது.
இந்நிலையில், ரி-ருவென்ரி தொடரையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடும் என்றும் கிரிக்கட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.