இந்தோனேசியா விமான விபத்திற்கு அரசாங்கமே பொறுப்பு – இறந்தவர்களின் உறவினர்கள்!
In ஆசியா November 5, 2018 10:46 am GMT 0 Comments 1477 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
இந்தோனேசியாவின் லயன் ஏயார் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த விமானம் பறக்க தகுதியற்றது என்றால் எதற்காக அதை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டனர் என்றும் அது தொடர்பில் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என கோரிகை விடுத்தனர்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 189 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக சென்ற 13 ஆவது நிமிடத்தில் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் உயிரிழந்த பயணிகள், அவர்களின் உடைமைகள் விமான பாகங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றும் மிகுதி பயணிகளையும் 2 ஆவது கருப்பு பட்டியையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) கருத்துக்களை வெளியிட்ட இறந்தவர்களின் உறவினர்கள் போக்குவரத்து அமைச்சர் புடி கரியா சுமாடி மற்றும் நாட்டின் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.