இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு
In இலங்கை January 18, 2021 8:03 am GMT 0 Comments 1386 by : Dhackshala

இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.
அதன்படி 763 புதிய கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 53 ஆயிரத்து 76 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த கொரோனா நோயாளர்களில் 747 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவர் சிறைச்சாலை கொத்தணியுடனும் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 49 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 264 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.