இன்றும் நாளையும் மகரந்தத் தூள் காற்றில் அதிகம் பரவும்
In இங்கிலாந்து June 20, 2019 9:04 am GMT 0 Comments 2315 by : S.K.Guna

இன்றும் நாளையும் மழை இல்லாததனால் மகரந்தத் தூள் காற்றில் அதிகமாகப் பரவி ஹே பீவர் (Hay fever) எனப்படும் ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதமும் மழையும் ஹே பீவரைத் தாமதப்படுத்தியுள்ளன. ஆனால் இன்று தொடங்கியுள்ள வெப்பமும் உலர்காற்றும் வளிமண்டலத்தில் மகரந்தத் தூள் பரவுவதை அதிகரிக்கச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பூக்கள், மரங்கள், புல் முதலானவற்றில் இருந்து மகரந்தத் தூள் காற்றில் கலக்கின்றன.எனினும் மழை பெய்கின்றபோது மகரந்தத் தூள் காற்றில் பரவுவது கணிசமாகக் குறைகின்றது.
சூடான வரண்ட காற்று உள்ள நாட்களில் மகரந்தம் பரவுவது அதிகமாக இருக்கும். இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு கண்கள் அரிப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல், எரிச்சலூட்டும் தும்மல், தலைவலி, உடற்சோர்வு என்பன ஏற்படும் .
ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் மகரந்தக் காய்ச்சல் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்றும் மேலும் மில்லியன் கணக்கானவர்கள் ஆஸ்மா நோயின் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர் என்றும் தேசிய சுகாதாரத்துறை கூறுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.