இன்று வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘கோமாளி’ திரைப்படம்
அடங்க மறு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.
நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதேபோல் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ தரச்சான்றிதழை வழங்கியுள்ளனர்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹிப்ஹொப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.