இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
In ஆன்மீகம் April 18, 2019 4:36 am GMT 0 Comments 3895 by : Krushnamoorthy Dushanthini

மேஷன்
உத்யோக முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். ஊர்மாற்றச் சிந்தனை உருவாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இனத்தார் பகை மாறும். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
ரிஷபம்
சுபச் செலவு ஏற்படும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்தொழில் சிறப்பாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். நண்பர்கள் உங்களை பாராட்டுவார்கள்.
மிதுனம்
வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். சுற்றத்தாரின் வருகையால் சுகம் கூடும். வரவு திருப்தி தரும் என்றாலும், விரயம் இரு மடங்காகலாம். திருமணப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
கடகம்
உறவினர் பகை அகலும் நாள். தொழில் முயற்சி வெற்றி பெறும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். தொழில் ரீதியாக திடீர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தனவரவு தாரளமாக வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழி தேடிக் கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம்.
கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிடுவீர்கள். பயணத்தால் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
துலாம்
சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டுக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும்.
விருச்சகம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். விருந்தினர் வருகை உண்டு. தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும்.
தனுசு
தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தெய்வ திருப்பணிக்காக கொடுத்துதவுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மாறும்.
கும்பம்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை செலவழிப்பீர்கள்.
மீனம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். ஆடைஇ ஆபரணப் பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.