இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா
In இலங்கை January 16, 2021 11:17 am GMT 0 Comments 1425 by : Yuganthini

இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல் விழா இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வு, இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனத்தின் ஊடாக விவசாய செய்கை ஆரம்பித்து இன்றுடன் 101 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று குறித்த பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருடம் தோறும் விவசாய சம்மேளனத்தினால் குறித்த பொங்கல் நிகழ்வு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வருகின்றது. இந்நிலையில் இன்றைய பொங்கல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் த.ராஜகோபு, இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதான பொங்கல் வைக்கப்பட்டதை தொடர்ந்து இரணைமடு விவசாய சம்மேளனத்தில் அங்கத்தவர்களாக உள்ள விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாய குடும்பங்கள் பொங்கலிட்டனர். சிறப்பாக இடமபெற்ற குறித்த பொங்கல் நிகழ்வில் அரச அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.