இரண்டு மில்லியன் மக்கள் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளதாக மாற் ஹான்காக் தெரிவிப்பு!
In இங்கிலாந்து January 11, 2021 9:20 am GMT 0 Comments 1882 by : Anojkiyan

ஃபைசர்- பயோஎன்டெக் அல்லது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் அளவை ஏற்கனவே 2 மில்லியன் மக்கள் பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அதிகரித்து வரும் தொற்றுநோய்களுடன் போராடி வருகிறது. ஆனால் வசந்த காலத்தில் வாழ்க்கையை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு விரைவான நோய்த்தடுப்பு மருந்தினை செலுத்திவருகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து மாற் ஹான்காக் கூறுகையில், ‘கடந்த வாரத்தில், டிசம்பர் மாதத்தை விட அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம், எனவே நாங்கள் பணியினை துரிதப்படுத்துகிறோம்.
நாங்கள் இப்போது 80 களில் மூன்றில் ஒரு பங்கிற்கு தடுப்பூசி போட்டுள்ளோம். இதுவொரு மிகச் சிறந்த முன்னேற்றம்’ என கூறினார்.
பெப்ரவரி நடுப்பகுதியில் 14 மில்லியன் மக்களின் இலக்கை அடைவதற்கு பிரித்தானியா முனைகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.