இரண்டு வருடத்தில் நான்காவது தேர்தலை எதிர்நோக்கும் இஸ்ரேல்
In உலகம் December 23, 2020 4:44 am GMT 0 Comments 1435 by : Sukinthan Thevatharsan

இஸ்ரேல் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளமையினைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில் குறித்த தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பெனி கேன்ட்ஸ்’ஸின் ப்ளூ அண்ட் வைட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கடந்த மே மாதம் கூட்டு அரசாங்கத்தை அமைத்தன.
எனினும் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கூட்டணிக்குள் முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இவ்விடயம் தோல்வியில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலானது கடந்த இரண்டு வருடகாலத்தில் நடைபெறும் நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.