இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ
In இலங்கை November 26, 2020 7:55 am GMT 0 Comments 1417 by : Dhackshala
அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான ஒரு சில நிறுவனங்கள் முன்னதாகவே இந்த அமைச்சகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.