இரா.சாணக்கியனுக்கு கொரோனாவா?- பரிசோதனை முடிவுகள் வெளியானது
In இலங்கை January 17, 2021 5:02 am GMT 0 Comments 1549 by : Yuganthini

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமிற்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சாணக்கியனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளை அறிவித்திருந்தார்கள்.
இதன்போது எனக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்காக பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் சுய தனிமைப்படுத்தலில் இருந்து நேரடி மக்கள் சேவைக்கு வருகின்றேன். மட்டக்களப்பின் நிலைமை தற்போது மோசமடைந்து கொண்டு வருகின்றது. மக்கள் மிகுந்த அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அதிலும் வயது கூடியவர்கள், சிறு பிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.