இறுதி 3 போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர் நீக்கம்!
In கிாிக்கட் October 25, 2018 12:21 pm GMT 0 Comments 1450 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மிகிதமுள்ள மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா இணைக்கப்பட்டுள்ள அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சமி நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டி வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
முதல் இரண்டு போட்டியில் இடம்பெறாத புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதற்க்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
3 ஆவது ஒருநாள் போட்டி புனேயில் 27 ஆம் திகதியும், 4 ஆவது போட்டி மும்பையில் 29 ஆம் திகதியும், 5 ஆவது போட்டி நவம்பர் 1 ஆம் திகதியும் திருவனந்தபுரத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.