இலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐ.நா. உறுதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவிருப்பதாக ஐ.நா. உறுதியளித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 359 பேரின் உயிரை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் அரச தலைவர்களும் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடி தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.