இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா!
In ஆசிரியர் தெரிவு July 16, 2019 1:55 am GMT 0 Comments 2450 by : Dhackshala
அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார்.
அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை.
எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது.
சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடிக்கும் சீனா, ஒருபோதும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது. அத்தகைய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கின்றது.
நாம் எப்போதும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும். வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக போராட வேண்டும். சொந்தமாக முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.