இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தனியார் துறைக்கான ஒத்துழைப்பை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.
இலங்கையில் சிறிய, நுண் மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வங்கி 100 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.
இதன்போது நுண் நிதித்துறை, சுகாதாரம் என்பன பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கென ஆறு மில்லியன் டொலர்கள் முதல் 13 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்க வங்கி திட்டமிட்டிருக்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 52 ஆவது வருடாந்த மாநாடு பீஜி தீவில் நேற்று ஆரம்பமானது. இந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான இலங்கை குழுவினர் பிஜி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.