இலங்கைப் பெண்களின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
In ஆசிரியர் தெரிவு February 2, 2021 5:56 am GMT 0 Comments 1367 by : Dhackshala
இலங்கைப் பெண்களுக்கு உதவும் முகமாக இலங்கையின் சனச அபிவிருத்தி வங்கிக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கும் பெண் தொழில்முனைவோருக்கும் உதவுவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி வங்கியான அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்படும் இந்த கடனுதவியானது இலங்கையில் தனியார்துறை முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.