இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படும்
In இலங்கை February 18, 2021 7:43 am GMT 0 Comments 1252 by : Dhackshala

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட இலங்கையர்களுக்கு அதன் இரண்டாவது டோஸ், தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான தடுப்பூசிகள் இலங்கைக்கு விரைவாக கிடைக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாத இறுதிக்குள் கொவெக்ஸ் வசதியின் கீழ் உலக சுகாதார அமைப்பினால் 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.