இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் குறித்து ஆராய உலக வங்கி எதிர்பார்ப்பு

இலங்கை நாடு எதிர்கொள்ளும் அபிவிருத்தி சவால்கள் குறித்து ஆராய எதிர்பார்த்துள்ளதாக, தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்கேஃபர் தெரிவித்துள்ளார்.
தனது இலங்கைக்கான விஜயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் துணைத் தலைவரது இலங்கைக்கான விஜயம் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட நாடாக முன்னேறுவதற்கு இலங்கை முயற்சித்து வருகின்ற நிலையில், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், அபிவிருத்திக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விஜயத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை அவர் சந்திக்க எதிர்பார்த்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.