இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு April 27, 2019 7:07 am GMT 0 Comments 2302 by : Dhackshala

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதால் அமெரிக்க குடிமக்கள் இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதக் குழுக்கள் இலங்கையில் சாத்தியமான தாக்குதல்களை திட்டமிட்டு தொடர்கின்றன என்பதனால் இந்த அறிவித்தலை விடுப்பதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க ஊழியர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் வரை நாடு திரும்புமாறு இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.