இலங்கையில் அதிக அபாயமிக்க பகுதிகளின் தகவல்கள் வெளியீடு
In ஆசிரியர் தெரிவு January 5, 2021 2:50 am GMT 0 Comments 2084 by : Dhackshala

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது தற்போது 45 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 468 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 451 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 16 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் மற்றுமொருவர் பாகிஸ்தானிலிருந்து வருகை தந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 45 ஆயிரத்து 242 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.