இலங்கையில் இன்று மீண்டும் திரையரங்குகள் திறப்பு
In இலங்கை January 1, 2021 3:47 am GMT 0 Comments 1270 by : Yuganthini

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளதுடன், சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.