இலங்கையில் உயிரிழந்த மக்களுக்கு புத்தகாயாவில் பிரார்த்தனைகள்
In இந்தியா April 22, 2019 7:31 am GMT 0 Comments 2374 by : Yuganthini
இந்தியாவின் புத்தகாயாவில் பௌத்த குருமார்களினால் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியை வேண்டியே குறித்த பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கொழும்பு உட்பட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே புத்தகாயாவில் சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. இதேவேளை மகாபோதி சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய பானேட்டி பி.ஷிவலை கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தாக்குதல் மனிதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பயங்காரவாத தாக்குதலாகும்.
இதேவேளை பயங்கரவாத்திற்கு உலகத்தில் எங்கும் இடமில்லை என்றும் இலங்கையின் அமைதிக்காகவும், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்” என சங்கைக்குரிய பானேட்டி பி.ஷிவலை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உட்பட சீனா, பிரித்தானியா. அமெரிக்கா, பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 வெளிநாட்டவர்கள் உயிரிந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் தாக்குதலையடுத்து இந்தியாவின் வணக்கஸ்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.