இலங்கையில் ஒரு மில்லியன் மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
In இலங்கை January 20, 2021 4:30 am GMT 0 Comments 1487 by : Dhackshala

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று காரணமாக மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 12 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 1121 பேர் தொற்றாளர்களாக பதிவாகின்ற போதிலும் அந்நாட்டில் ஒரு மில்லியன் மக்களில் 93 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆகப் பதிவாகியுள்ளது. அவர்களில் 46 ஆயிரத்து 594 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.