இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – 726 பேருக்கு தொற்று
In ஆசிரியர் தெரிவு February 7, 2021 2:56 am GMT 0 Comments 1345 by : Dhackshala

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 576ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 133 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 631 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 726 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.