இலங்கையில் கொரோனாவால் 60 ஆயிரத்து 694 பேர் பாதிப்பு – 290 பேர் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு January 28, 2021 2:43 am GMT 0 Comments 1413 by : Dhackshala

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 694ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 52 ஆயிரத்து 566 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 838 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 781 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேநேரம், ஹொரணை − கோனபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.