இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430ஆக அதிகரித்துள்ளது .
இறுதியாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர், கடந்த 16ம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு – 08 பகுதியைச் சேர்ந்த ஆண்ணொருவர், அநுராதபுரம்- மெத்சிறி சேவன சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.
மீகொட பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
மேலும், ரிதிமாலியத்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர், பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தெகடன பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்ணொருவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்ணொருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜனவரி 20ம் திகதி உயிரிழந்துள்ளார்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.