இலங்கையில் ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கை தமிழர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டுள்ளாரென அவர் தமது டுவிட்டர் பதவில் இன்று (சனிக்கிழமை) குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், இலங்கையில் இடம்பெற்றிருப்பது ஜனநாயக படுகொலையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவற்றை கருத்திற்கொண்டு, பிரதமர் மோடி அரசாங்கம் இனியும் மௌனம் காக்காமல் தமிழர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்மென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் பிரதமர் பதவி மாற்றப்பட்டமை தொடர்பாக கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளமை பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.