கொரோனா அச்சம்: இலங்கையில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
In இலங்கை December 14, 2020 4:24 am GMT 0 Comments 1394 by : Yuganthini

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றமையினால் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், நாட்டில் நேற்றைய தினமே (ஞாயிற்றுக்கிழமை) அதிகூடிய பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதாவது, 15,239 பேருக்கு நேற்றைய தினம், பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 655 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையிலேயே பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.