இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு – மொத்தம் 375ஆக உயர்வு
In இலங்கை February 11, 2021 2:50 am GMT 0 Comments 1214 by : Dhackshala

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 5 பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா நிலை, இதய நோய் தொற்று என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்டது.
பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவர் தேசிய தொற்று நோயியல் நிருவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலை, குருதி விசமானமை மற்றும் சிறுநீரகம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பட்டுள்ளது.
இதேவேளை, வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் இரனைவில சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.