இலங்கையில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு: சிசிர கோதாகொட
In இலங்கை September 28, 2018 11:20 am GMT 0 Comments 1702 by : Yuganthini

நாட்டில் இதுவரை காலமும் இல்லாதளவு ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபைத் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துக்கள் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ரயிலில் மோதி 241 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆகையால் ரயில் விபத்துக்களை தடுப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதுடன் நவீன முறைகளையும் கையாள திட்டமிட்டுள்ளோம்.
இதேவேளை ரயிலில் மோதுண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனவும் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.