இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை
In ஆசிரியர் தெரிவு April 18, 2019 6:11 am GMT 0 Comments 2215 by : Dhackshala
தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி இதனை கூறியுள்ளார்.
யுத்தத்தின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினரே 23ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
ஐ.நா. உயரஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளின் வசதிபடுத்தலுடன் இவர்கள் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக மீள் குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கூறியுள்ளார்.
இவ்வாறு 48 பேர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகவும் அவர்களில் 25 குடும்பங்களைச் சேந்ந்த 23 ஆண்களும் 25 பெண்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அழைத்துவரப்படும் அகதிகள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
அவர்களுக்கான பயணசீட்டு அடங்களாக மானியமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக மீள் குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
அத்தோடு, வயது குறைந்தவர்களுக்கு தலா 5000 ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்து கொடுப்பனவான 2,500 ரூபாயும் உணவு அல்லாத மானியமாக தனிநபருக்கு 5000 ரூபாயும் குடும்பத்திற்கு 10,000 ரூபாயும் ஐ.நா. வால் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சரால் மானியமாக 5000 ரூபாயும் தற்காலிக தங்குமிட வசதிகளுக்காக 25,000 ரூபாயும் உபகரணங்களுக்கு 3,000 ரூபாயும் காணி சுத்திகரிப்புக்காக 5000 ரூபாயும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.