இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி
In விளையாட்டு September 6, 2018 5:28 pm GMT 0 Comments 1521 by : Benitlas

11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்டத்தின் இரண்டாம் சுற்றில் இலங்கை தனது கடைசிப் போட்டியில் இன்று(வியாழக்கிழமை) ஹாங்காங்கை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இலங்கை அணி முதல் கால் மணியை 18 -13 எனும் கோல் கணக்கில் கைப்பற்றியது.
தொடர்ந்து இரண்டாம் கால் மணியில் 21-12 எனும் கோல் கணக்கிலும், மூன்றாம் கால் மணியில் 15-10 எனும் கோல் கணக்கிலும் இலங்கை முன்னிலை பெற்றது.
நான்காவது கால்மணியை 17 -13 என தனதாக்கிய இலங்கை அணி போட்டியில் 71-48 எனும் பாரிய கோல் வித்தியாசத்தில் வெற்றிவாகைசூடியது.
இந்த வெற்றியுடன் கிண்ணத்திற்கான ஈ குழுவில் முதலிடம் பெற்ற இலங்கை நாளை மறுதினம் சிங்கப்பூருடன் அரை இறுதியில் மோதவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.