இலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டும் – கஜேந்திரன்
In இலங்கை January 28, 2021 5:21 am GMT 0 Comments 1421 by : Dhackshala
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு இலங்கை அரசு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்தியா இலங்கையினுடைய அயல்நாடாக இருக்கின்றது. எங்களை பொறுத்தவரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களிலே மிகுந்த அக்கறை இருக்கின்றது.
இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விதமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம்.
இலங்கையில் பல இடங்களிலே சீனாவிற்கு இடம்கொடுக்கப்பட்டிருக்கின்ற சூழலிலே இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த இடத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.