இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பிரான்ஸ் பிரஜைகள் கைது
In இலங்கை February 19, 2021 3:31 am GMT 0 Comments 1262 by : Yuganthini

இலங்கை கடற்பரப்பிற்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கப்பலின் கேப்டனுடன் இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஸ்ஸ கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஏழு நாட்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து கப்பலில் பயணித்ததாகவும் கப்பலின் எரிபொருள் நிறைவடைந்ததன் காரணமாக அவர்கள் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தை நோக்கி கப்பலை செலுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு செல்லும்போதே மிரிஸ்ஸ கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.