இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த தெரிவுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், உறுப்பினர்களாக சமிந்த மென்டிஸ், பிரமோத்ய விக்கிரமசிங்க, எம்.எ.டபிள்யூ.ஆர்.மதுரசிங்க, டி.நில்மினி குணரத்ன, ஹேமந்த தேவப்பிரிய மற்றும் எஸ்.எச்.யு.கர்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.