இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களுக்கு முக்கிய பதவி!

இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தொழில்நுட்ப ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த குழுவில் ரொஷான் மஹானாமா, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய கிரிக்கெட் சபை ஆகியவற்றிற்கு, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பிலான விடயங்களை தெளிவூட்டுவதே இந்த குழுவின் கடமையாக காணப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.