இலங்கை குண்டுத் தாக்குதல் சம்பவம்: சமாதானப் பேரவை அறிக்கை
In ஆசிரியர் தெரிவு April 25, 2019 1:43 am GMT 0 Comments 1979 by : Litharsan

தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றும், சரியாக அதனை பயன்படுத்திக் கொள்ளாமை கவலையளிப்பதாக தேசிய சமாதான பேரவை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழையாமை குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைவதாக பேரவை தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 பேர் வரையில் காயமடைந்தனர்.
இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றும், சரியாக அதனை பயன்படுத்திக் கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தேச நலன் கருதி, கண்கூடாக ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்திக் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.