இலங்கை மக்களின் காத்திருப்பு தொடர் கதையாகிவிட்டது: ஐ.நா.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்துக் கொள்வதற்கு அவர்களது உறவினர்கள் மிக நீண்டகாலமாக காத்திருந்து விட்டதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 39ஆவது பொதுக் கூட்டம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.செயற்குழுவின் ஆண்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய பரிகாரம் செய்துக் கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை, தங்களது புனர்வாழ்விற்காக போதுமான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா. செயற்குழுவின் 116ஆவது அமர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இதன்போது 46 நாடுகளின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான 840 வழக்குகள் விவாதிக்கப்படவுள்ளன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.